ஈரானை உறைய வைத்த மின்னல் வேக ஜப்பான்

துபாய்: ஆசியக் கிண்ணத்தை ஜப்பான் காற்பந்துக் குழு நெருங்கி உள்ளது. 
நேற்று முன்தினம்  நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஈரானை 3=0 எனும் கோல் கணக்கில் அது புரட்டி எடுத்தது.
இதன் விளைவாக போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஜப்பான் தகுதி பெற்றுள்ளது.
முற்பாதி ஆட்டத்தில் இரு குழுக்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
ஜப்பான் தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்த, விட்டுக்கொடுக்காமல் அவற்றை முறியடித்தது ஈரான்.
இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது.
பிற்பாதி ஆட்டத்தில் ஜப்பான் கோல் போட்டு முன்னிலை வகித்தது.
ஆனால் இந்த கோல் புகுந்த விதம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
பெனால்டி எல்லைக்குள் ஜப்பானிய வீரர் விழு, தப்பாட்டம் நிகழவில்லை என்று கூற நடுவரை நோக்கி ஈரானின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் ஓடினர். ஆனால் நடுவர் ஆட்டத்தை நிறுத்தவில்லை.
இதுவே ஈரான் செய்த மிகப் பெரிய தவறு. ஈரானிய வீரர்கள் நடுவரிடம் பேசிக்கொண்டிருக்க, ஜப்பான் தாக்குதலைத் தொடர்ந்தது.
ஈரானிய வீரர்கள் சுதாரிப் பதற்குள் ஜப்பான் கோல் போட்டது.
இந்த கோல் ஈரானை வெகுவாகப் பாதித்தது. இதுவே ஆட்டத்தின் திருப்பமாக அமைந் தது.
சில நிமிடங்கள் கழித்து, ஈரான் தற்காப்பு ஆட்டக்காரரின் கையில் பந்து பட்டதாகக் கூறி ஜப்பானுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பெனால்டி மூலம் ஜப்பான் இரண்டாவது கோலைப் போட்டது. ஆட்டம் முடிய சில நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த போது ஜப்பான் அதன் மூன்றாவது கோலைப் போட்டு கொண்டாடியது.
மறுமுனையில் ஈரான் வீரர்கள், ரசிகர்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினர்.
ஈரானுக்கு எதிராக கோல் போட்டு கொண்டாட்டத்தில் மூழ்கும் யுயா ஒசாக்கோ (வலது). படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி