மேன்சிட்டியை அடக்கிய நியூகாசல்

நியூகாசல்: பிரிமியர் லீக் தர­வரி­சையில் லிவர்பூல் அணிக்கு உள்ள முன்னிலையைக் குறைக்­கும் நோக்கத்துடன் நேற்று அதிகாலை நியூகாசல் குழுவுடன் மோதிய மான்செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்­சியே மிஞ்சியது.
ஆட்டம் தொடங்கிய 24 வினாடிகளிலேயே முதல் கோலை போட்டு அசத்திய மான்செஸ்டர் சிட்டியை பின்னர் தனது காற் பந்தாட்டத்தால் அடக்கி ஆண்டது நியூகாசல் குழு. 
அந்த ஒரு கோலை தொடர்ந்து மான்செஸ்டர் சிட்டி குழுவால் நியூகாசல் குழுவின் கோல் காப்பாளருக்கு எவ்வித நெருக்கு தலையும் சிட்டி வீரர்களால் கொடுக்க முடியவில்லை. 
இதைத் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொண்ட நியூகாசல் வீரர்கள் மெல்ல மெல்ல மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடத் தொடங்கினர்.
அதற்குரிய பலனையும் அவர் கள் பெற்றனர். ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் நியூகாசலின் சாலமோன் ரோண்டோன் சக வீரரான ஐசெக் ஹேய்டன் என்ப­வரிடமிருந்து கிடைத்த பந்தை சிட்டி கோல் வலையை நோக்கி உதைக்க, சிட்டி கோல் காப்பா­ளரால் அதைத் தடுக்க முடிய­ வில்லை. 
நியூகாசல் குழு போட்ட இந்த கோலால் அரங்கமே அதிர்ந்தது. நியூகாசலின் சொந்த மைதானத் தில் நடந்த ஆட்டம் என்பதால் அந்தக் குழு ஆதரவாளர்கள் இடையே மகிழ்ச்சி ஆரவாரம் கரைபுரண்டோடியது.
இதைத் தொடர்ந்து மேலும் சுறுசுறுப்படைந்த நியூகாசல் சிட்டி கோல் வலையை நோக்கி முன் னேறித் தாக்குவதை அதிகப்படுத் தியது. ஆட்டத்தின் 78வது நிமி­டத்தில் நியூகாசல் வீரரான சோன் லோங்ஸ்டாஃப் என்பவரை கோல் எல்லைக்குள் கீழே தள்ள நியூகா சல் குழு தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்­ கியது. 
இந்தப் காற்பந்துப் பருவத்தில் இதுவரை மான்செஸ்டர் சிட்டி விட்டுக்கொடுத்துள்ள புள்ளி களின் எண்ணிக்கை சென்ற காற்பந்து பருவத்தில் அது விட்டுக்கொடுத்த புள்ளிகளை விட அதிகம் என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி 

19 Jun 2019

ஜப்பான் வீரர்களைத் திணறடித்த சிலி

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி

19 Jun 2019

அரை இறுதியை நோக்கி முன்னேறும் பங்ளாதேஷ்