ரோகித்: பந்தடிப்பு படுமோசம்

ஹேமில்டன்: எதிரணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்ந்து வந்த இந்திய கிரிக்கெட் அணி, நேற்று நியூசிலாந்து அணியிடம் மரண அடி வாங்கி பெரும் அதிர்ச்சி அளித்தது.
முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி ஏற் கெனவே வென்றுவிட்ட நிலையில், நேற்று நான்காவது போட்டி நடை பெற்றது.
விராத் கோஹ்லி ஓய்வில் இருக்க, காயத்தால் அவதிப்படும் டோனி நேற்றும் களமிறங்க வில்லை. ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணியில் அறி முக வீரராக இடம்பெற்றார் இளம் பந்தடிப்பாளர் ‌ஷுப்மன் கில்.
பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதையடுத்து, முதலில் பந்தடித்த இந்திய அணிக்குத் தொடக்கத்தில் இருந்தே சரிவுதான். ரோகித் (7), தவான் (13), ராயுடு (0), கார்த்திக் (0),  கில் (9), ஜாதவ் (1), புவனேஸ்வர் (1) என 40 ஓட்டங் களுக்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்தது.
ரோகித்தை அடுத்து, ஹார்திக் பாண்டியா (16), குல்தீப் யாதவ் (15), ஆட்டமிழக்காமல் இருந்த சகல் (18) ஆகிய மூவரும் இரட்டை இலக்கத்தை எட்டினர்.
இறுதியில், 30.5 ஓவர்களி லேயே வெறும் 94 ஓட்டங்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி யின் மிகக் குறைவான ஏழாவது ஓட்ட எண்ணிக்கை இது.
டிரென்ட் போல்ட் ஐந்து விக் கெட்டுகளையும் கிராண்ட்ஹோம் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலையச் செய்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்த டிப்புத் தொடக்கம் இந்திய அணிக்கு நேர்மாறாக இருந்தது. புவனேஸ்வர் வீசிய முதல் பந்தி லேயே சிக்சரைப் பறக்கவிட்ட கப்டில், அடுத்த இரு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனா லும் அடுத்த பந்திலேயே அவர் தமது விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் இலக்கு சிறியது என்பதால் நியூசிலாந்து வீரர்கள் பதற்றமடையவில்லை. 14.4 ஓவர் களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து அந்த அணி வெற் றியை எட்டியது.
எஞ்சியிருந்த பந்துகள் எண் ணிக்கை அடிப்படையில் இந்திய அணியின் ஆக மோசமான தோல்வி இது. 212 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் இந்தியா தோல்வியடைந்தது.
தோல்வி குறித்துப் பேசிய ரோகித், “நெடுங்காலத்திற்குப் பிறகு இந்திய அணியின் பந்த டிப்பு படுமோசமாக இருந்தது. ஆடு களத்தைக் குறைசொல்ல முடியாது. பந்து நன்றாக ‘ஸ்விங்’ ஆன நிலையில் எங்களது பந்தடிப்பு வரிசை தோற்றுவிட்டது,” என்றார்.
கோலின் டி கிராண்ட்ஹோம் வீசிய பந்து ஸ்டம்ப்பைப் பதம்பார்க்க, ஏமாற்றத்துடன் இந்தியாவின் புவனேஸ்வர் குமார். படம்: ஏஎஃப்பி
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி 

19 Jun 2019

ஜப்பான் வீரர்களைத் திணறடித்த சிலி

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி

19 Jun 2019

அரை இறுதியை நோக்கி முன்னேறும் பங்ளாதேஷ்