செல்சி, லிவர்பூல் சறுக்கல்

லண்டன்: இவ்வார மத்தியில் நடந்த ஆட்டங்கள் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைந்தன.
இரண்டாமிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி குழு முதல் நாள் இரவு நியூகாசல் யுனைடெட் குழுவிடம் தோற்றிருந்த நிலையில், அதைச் சாதகமாக்கிக்கொண்டு சிட்டிக் கும் தனக்கும் இடையிலான புள்ளி வித்தியாசத்தை உயர்த்திக் கொள்ளத் தவறியது முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல்.
லெஸ்டர் சிட்டி குழுவுடன் நேற்று அதிகாலை இடம்பெற்ற ஆட்டத்தின் மூன்றாம் நிமிடத்தி லேயே கோலடித்து லிவர்பூலுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் சாடியோ மானே. ஆனால், இடை வேளைக்கு முன்னதாக லெஸ்டர் வீரர் மகுவேர் அடித்த கோல் மூலம் ஆட்டம் சமனுக்கு வந்தது.
பிற்பாதியில் இரு குழுக்களின் கோல் முயற்சிகளும் எடுபடாமல் போனதால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் கண்டது.
இரவு நேரத்தில் பெய்த பனி யால் ஆன்ஃபீல்ட் திடலில் பந்து உருளச் சிரமமாக இருந்ததாகக் குறிப்பிட்டார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். இதனால் ஆட்டத் தில் 70, 80 விழுக்காட்டு நேரம் பந்து தங்கள்வசம் இருந்தபோதும் பந்தை விரைவாகக் கடத்த வீரர் கள் சிரமப்பட்டதாக அவர் ஆதங் கப்பட்டார்.
மற்றோர் ஆட்டத்தில், இரண்டாம் பாதியில் நான்கு கோல்களை விட்டுத் தந்து 4-0 என்ற கோல் கணக்கில் போர்ன்மத் குழுவிடம் மரண அடி வாங்கியதால் புள்ளிப் பட்டியலில் முதன்முறையாக செல்சி குழு ஐந்தாம் இடத்திற்கு இறங் கியது. ஐந்தாமிடத்தில் இருந்த ஆர்சனல் நான்காமிடத்திற்கு முன் னேறியது.
செல்சியின் தோல்வியை அதன் நிர்வாகி சாரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி 

19 Jun 2019

ஜப்பான் வீரர்களைத் திணறடித்த சிலி

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி

19 Jun 2019

அரை இறுதியை நோக்கி முன்னேறும் பங்ளாதேஷ்