திருப்பி அடிக்க தயாராகும் இந்தியா

வெலிங்டன்: நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்திடம் அடைந்த அவமானகரமான தோல்விக்குப் பதிலடி தர இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
குணமடைந்து வரும் மகேந்திர சிங் டோனி நாளை நடைபெறவுள்ள ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே தினேஷ் கார்த்திக்கிற்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
ஏற்கெனவே இந்திய அணியிடம் 3 -1 எனத் தொடரை இழந்திருந்தாலும் 4வது போட்டியில் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தப் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி, டோனி இருவரும் விளையாடாத நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 30.5 ஓவரிலேயே வீழ்ந்தது.
94 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி, நியூசிலாந்து அணியை பந்துவீச்சிலும்  கட்டுப்படுத்தத் தவறியதால் வெற்றியைப் பறிகொடுத்தது.
இந்நிலையில், நாளை நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள வெஸ்ட்பேக் மைதானத்தில் இந்த அணிகள் கடைசி ஒருநாள் போட்டியில் மோதவுள்ளன.
இம்மைதானத்தில் நடந்த இந்திய அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்ற போட்டியில் பெற்ற வெற்றி நியூசிலாந்துக்கு நம்பிக்கை அளித்தாலும் அதன் பந்தடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாத நிலையில், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு