சிட்டியுடன் மோதும் ஆர்சனல்

லண்டன்: மான்செஸ்டர் சிட்டியும்  ஆர்சனலும் இன்றிரவு மோது கின்றன. இந்தக் காற்பந்து ஆட்டம் சிட்டியின் விளையாட்டரங் கத்தில் நடைபெறுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு இவ்விரு குழுக்களும் சந்தித்துக்கொண்ட போது 2=0 எனும் கோல் கணக்கில் சிட்டி வெற்றி பெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை நியூகாசலிடம் 2=1 எனும் கோல் கணக்கில் சிட்டி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
இதன் விளைவாக இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் சிட்டியின் வீரர்கள் களமிறங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை.
சிட்டியைத் தடுக்க ஆர்சனலின் நிர்வாகி உனாய் எமெரி வியூகம் வகுத்து வருகிறார்.
ஆர்சனலின் பல ஆட்டக் காரர்கள் காயமுற்று இருக்கின் றனர். இது ஆர்சனலுக்கு ஏற்பட் டுள்ள பின்னடைவு. இருப்பினும், லீக் ஜாம்பவான்களையும் தன்னால் தோற்கடிக்க முடியும் என்று ஆர்சனல் நிரூபித்துள்ளது.
ஸ்பர்ஸ் குழுவை 4-2 எனும் கோல் கணக்கிலும் செல்சியை 2=0 எனும் கோல் கணக்கிலும் ஆர்சனல் வீழ்த்தியுள்ளது.
ஆனால் லீக் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள லிவர்பூலையும் இரண்டாவது இடத்தில் உள்ள சிட்டியையும் சமாளிக்க முடியாமல் ஆர்சனல் திணறி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலாவுக்கு எதிராக எமெரி வெற்றி பெற்ற தில்லை. அதிலும் இன்றைய ஆட்டத்தில் ஆர்சனலுக்காக எப்பொழுதும் களமிறங்கும் நான்கு தற்காப்பு ஆட்டக்காரர் களில் மூவர் காயமுற்று விளை யாட முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. ஆனால் நீக்குப் போக்குடன் உத்திகளை வகுக்கும் எமேரியைக் குறைத்து மதிப்பிட முடியாது. இன்று அவர் ஆர்சன லுக்காக கோல் வேட்டையில் இறங்கும் பொறுப்பை லகாசேட் மற்றும் ஒபமெயாங்கிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நியூகாசலிடம் தோற்றதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்காமல் இன்றைய ஆட்டத்தில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே சிட்டிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகிழ்ச்சியை சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பங்ளாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் (வலக்கோடி). படம்: இணையம்

26 Jun 2019

பங்ளாதேஷ் அசத்தல் வெற்றி