தொடரை இழந்தது இங்கிலாந்து

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோற்று தொடரைப் பறிகொடுத்தது.
முதல் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் தோற்று அவமானப்பட்ட இங்கிலாந்து அணி, அடுத்த ஆட்டத்தில் எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களிடம் அவர்களின் பந்தடிப்பு எடுபடாமல் போனது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 
187 ஓட்டங்களையும் வெஸ்ட் இண்டீஸ் 306 ஓட்டங்களையும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வெறும் 132 ஓட்டங்களை மட்டும் எடுக்க, 14 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை 2.1 ஓவர்களிலேயே எட்டி, பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
தொடரை 2-0 என ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றிவிட்ட நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் கடைசி, மூன்றாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 9ஆம் தேதி தொடங்குகிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகிழ்ச்சியை சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பங்ளாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் (வலக்கோடி). படம்: இணையம்

26 Jun 2019

பங்ளாதேஷ் அசத்தல் வெற்றி