தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை

புதுடெல்லி: ஒருநாள் போட்டிகளுக்கான உலகத் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் நடந்த நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் சதம் விளாசிய மந்தனா, மூன்றாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களைக் குவித்தார். இதையடுத்து, தரவரிசையில் நான்காமிடத்தில் இருந்த அவர், மூன்று இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்தார். அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன அவர், அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் இதுவரை நான்கு சதங்களை அடித்துள்ளார். குறிப்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அவரது ஆட்டத் திறன் உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் மந்தனா அவற்றில் இரண்டு சதங்களையும் எட்டு அரை சதங்களையும் விளாசினார்.
 

Loading...
Load next