சச்சின்: எங்கும் எதிலும் இந்திய அணியால் சாதிக்க முடியும்

கோல்கத்தா: இப்போதைய இந்திய கிரிக்கெட் அணியால் உலகின் எந்த நாட்டிலும் எத்தகைய ஆடு களத்திலும் சாதிக்க முடியும் என்று அந்த அணியின் முன்னாள் சகாப்தம் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கோல்கத்தாவில் நேற்று நெடுந்  தொலைவு ஓட்டப் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த சச்சின், இவ்வாண்டு மத்தியில் இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் வெற்றி மகுடம் சூட இந்திய அணிக்கே அதிக வாய்ப் புள்ளது என்றும் கணித்துள்ளார். 
போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்து, எதிரணிகளுக்குப் பெரும் சவாலாக விளங்கும் என்ற அவர், நியூசிலாந்து அணியை உலகக் கிண்ணத்தின் ‘கறுப்புக் குதிரை’ என்றும் குறிப்பிட்டார்.
சொந்த மண்ணிலேயே அந்த அணி இந்திய அணியிடம் அடி வாங்கியபோதும் திறமையான பல ஆட்டக்காரர்களை அது கொண்டு உள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, பந்தைச் சேதப் படுத்தியதால் தடைபெற்ற ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய ஆஸ்திரேலியர்களின் தடைக்காலம் மார்ச் 29ஆம் தேதியுடன் முடி கிறது. அவர்கள் அணிக்குத் திரும்பியபின் ஆஸ்திரேலியாவும் அபாயகரமான அணியாக எழுச்சி பெறும் என சச்சின் குறிப்பிட்டார்.