நம்பிக்கை அளிக்கும் ராயுடு

வெலிங்டன்: உலகக் கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நிலையில் இந்திய அணியில் நான்காவது வீரராகக் களமிறங்கத் தன்னை விடப் பொருத்தமான ஆளில்லை என நிரூபித்து வருகிறார் அம்பதி ராயுடு.
நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தத்தளித்து வந்த இந்திய அணியைத் தூக்கி நிறுத் தியது ராயுடுவின் ஆட்டம். இத னால் ஒரு கட்டத்தில் வெற்றிபெற சாத்தியமே இல்லை என்ற நிலை மாறியது. இறுதியில், இந்திய அணி 35 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-1 என்ற கணக் கில் தொடரையும் கைப்பற்றியது.
நேற்று நடந்த இறுதி ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், கலீல் அகமது ஆகியோர் நீக்கப்பட்டு டோனி, முகம்மது ஷமி, விஜய் சங்கர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. ரோகித் (2), தவான் (6), ‌ஷுப்மன் கில் (7), டோனி (1) என நால்வரை இழக்க, இன்னொரு மோசமான தோல்வி காத்திருக்கிறதோ என எண்ணத் தோன்றியது.
அந்த எண்ணத்தை மாற்றியது ராயுடு-சங்கர் இணையின் ஆட்டம். ராயுடு மிக நிதானமாக ஆட, எந்தப் பதற்றமும் இல்லாமல் பந்து அடித்தார் சங்கர். அனைத்துலக ஒருநாள் போட்டியில் முதல் அரை சதத்தை எட்டுவார் என எதிர்பார்க் கப்பட்ட வேளையில், தேவையின்றி 'ரன் அவுட்' ஆக 45 ஓட்டங்களு டன் அவர் வெளியேற நேர்ந்தது.
அடுத்து வந்த ஜாதவ் (34) நல்ல ஒத்துழைப்பு தர, அரை சதம் கடந்ததும் அதிரடியில் இறங்கினார் ராயுடு. அவர் 90 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சத வாய்ப்பை இழந் தார். கடைசி ஓவர்களில் பாண்டியா 'ஹாட்ரிக்' சிக்சருடன் 22 பந்து களில் 45 ஓட்டங்களை விளாசி னார். அனைத்துலகப் போட்டிகளில் பாண்டியா 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்தது இது ஐந்தாவது முறை.
இறுதியில், ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் இந்தியா 252 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்து பந்தடித்த நியூசிலாந் தும் தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அணித் தலைவர் கேன் வில்லியம்சன் (39), டாம் லேதம் (37), ஜேம்ஸ் நீஷம் (44) ஆகியோர் சற்று நம்பிக்கை அளித்தபோதும் அது வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. 44.1 ஓவர்களில் அந்த அணி எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 217 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தோற்றது. இந்தியத் தரப்பில் சகல் மூன்று விக்கெட்டுகளையும் ஷமி, பாண்டியா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ராயுடு ஆட்ட நாயகனாகவும் ஷமி தொடர் நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!