ரியால் தொடர்ந்து நான்காவது வெற்றி

மட்ரிட்: ஸ்பானிய காற்பந்து லீக் போட்டியில் ரியால் மட்ரிட் தொடர்ந்து நான்காவது வெற்றி யைப் பதிவு செய்துள்ளது.
நேற்று முன்தினம் அலாவேஸ் குழுவுடன் ரியால் மோதியது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரியாலைச் சமாளிக்க முடியாமல் அலாவேஸ் திக்கு முக்காடியது.
ஆட்டம் தொடங்கி ஏறத்தாழ 30 நிமிடங்களில் பிரஞ்சு நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா ரியாலின் முதல் கோலைப் போட்டார்.
கடந்த நான்கு ஆட்டங்களில் இது அவர் போட்டுள்ள ஆறாவது கோலாகும்.
இடைவேளையின்போது  1-0 எனும் கோல் கணக்கில் ரியால் முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்திலும் ரியால் தாக்குதலில் தீவிரம் காட்டியது.
ஆனால் ரியாலின் மிரட்டல் களைக் கண்டு பதறாமல் அலாவேஸ் குழுவின் தற்காப்பு வீரர்கள் நிதானமாக விளை யாடினர்.
இருப்பினும், பிடிவாதமாக நின்ற அலாவேசின் தற்காப்பு அரணை 80வது நிமிடத்தில் உடைத்து ரியாலின் இரண்டாவது கோலைப் போட்டார் வினிசியஸ் ஜூனியர். ஆட்டம் முடிவதற்குள்  ரியாலின் மூன்றாவது கோலைப் போட்டார் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய மரியானோ டியோஸ்.
3-0 என ரியால் வென்றது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பந்தைப் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர் முகம்மது அமீரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் டேவிட் மில்லர். படம்: ஏஎஃப்பி

25 Jun 2019

தென்னாப்பிரிக்க அணியின் பயணம் முடிந்தது

அர்ஜெண்டினாவின் இரண்டாவது கோலைப் போடும் செர்ஜியோ அகுவேரோ (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

25 Jun 2019

கத்தாரைச் சாய்த்த அர்ஜெண்டினா

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்