மான்செஸ்டர்: செர்ஜியோ அகு வேரோ போட்ட மூன்று கோல்கள் ஆர்சனலைத் தோற்கடித்தது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் 3=1 எனும் கோல் கணக்கில் ஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி. இந்த வெற்றியின் மூலம் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் முன்னிலை வகிக்கும் லிவர் பூலுக்கும் தனக்கும் உள்ள இடைவெளியை சிட்டி குறைத் துள்ளது. தற்போது வெறும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சிட்டி இரண்டாவது நிலையில் உள்ளது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து சிட்டி ஆதிக்கம் செலுத்தியது. ஒரு நிமிடத்துக்குள் அகுவேரோ சிட்டியின் முதல் கோலை போட்டார். துவண்டுவிடாமல் விளையாடிய ஆர்சனல் 11வது நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது. முற்பாதி ஆட்டம் முடிவதற்குள் அகுவேரோ சிட்டி யின் இரண்டாவது கோலைப் போட்டார். இடைவேளையின்போது சிட்டி 2=1 என முன்னிலை வகித்தது. தாக்குதலில் தீவிரம் காட்டிய சிட்டி பல கோல் முயற்சிகளில் ஈடுபட்டது. மாறாக, ஆர்சனல் நம்பிக்கை இழந்தது போன்று இருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் வலை நோக்கி அனுப்பிய பந்து ஒருமுறைகூட இலக்கை அடைய வில்லை. இந்நிலையில், அகுவேரோ மூன்றாவது கோலைப் போட்டு சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார்.
அகுவேரோ 'ஹாட்ரிக்'; வீழ்ந்தது ஆர்சனல்
1 mins read
மூன்றாவது கோலைப் போடும் மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர வீரர் செர்ஜியோ அகுவேரோ (இடமிருந்து இரண்டாவது). வலை நோக்கிச் செல்லும் பந்தைத் தடுக்க ஆர்சனல் கோல்காப்பாளர், தற்காப்பு ஆட்டக்காரர் பாய்கின்றனர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ஏஎஃப்பி -

