விறுவிறுப்பான டி20 ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்றதென்னாப்பிரிக்கா

டர்பன்: பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3=0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் 3=2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரில் 1=0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. 
தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது.
பாகிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-=0 எனக் கைப்பற்றியது.

Loading...
Load next