சுடச் சுடச் செய்திகள்

சர்ஃபிராஸ் அகமது: அணித் தலைவர் பதவிக்கு ஆபத்து இருக்காது

லாகூர்: இனவெறி சர்ச்சையில் நான்கு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் அணித் தலைவராகச் செயல்பட முடியாமல் போகும் ஆபத்தாக இருக்காது என சர்ஃபிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. டர்பனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின்போது பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ஃபிராஸ் அகமது, தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் பெலுக்வாயோ குறித்து இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியது மைக்கில் பதிவானது.
இதனால் ஐசிசி அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாடத் தடை விதித்தது. “நான் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தலைவராக இருப்பேன். இருப்பினும், இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கட்டும்’’ என்று சர்ஃபிராஸ் அகமது தெரிவித்தார்.