‘இனிவரும் ஆட்டங்களில் திடீர் திருப்பங்களை எதிர்பார்க்கலாம்’

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) பட்டத்தை மான்­செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு இம்முறை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று கூறிய விமர்­சகர்களின் கருத்துகளுக்கு சிட்டி­யின் நிர்வாகி பெப் கார்டியோலா பதிலடி கொடுத்துள்ளார்.
நடப்பு இபிஎல் பருவம் இறுதிக் கட்டத்தை எட்டுவதற்குள்ளேயே சிட்டி பட்டத்தை வெல்ல முடியாது என்று விமர்சகர்கள் தீர்மானித்து­விடக்கூடாது என்று கூறிய அவர், இனிவரும் ஆட்டங்களில் திடீர் திருப்பங்களை அவர்கள் எதிர்­பார்க்கலாம் என்றார்.
லீக் பட்டியலில் முதலிடம் வகித்த லிவர்பூல் கடைசியாக விளையாடிய இரு ஆட்டங்களில் சமநிலை கண்டது. அதனால் இன்று அதிகாலை எவர்ட்டன் உடனான ஆட்டத்தில் மேன்சிட்டி வென்றிருந்தால் லிவர்பூலை முந்தி லீக் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு சிட்டிக்கு உள்ளது.
இந்நிலையில், சிட்டி விளையாட உள்ள எஞ்சிய ஆட்டங்களில் தமது ஆட்டக்காரர்கள் பதற்றப்­படாமல் நிதானத்துடன் விளையாட வேண்டும் என்று கார்டியோலா வலியுறுத்தியுள்ளார்.
"மூன்று, நான்கு நாட்களுக்கு முன்பு, லிவர்பூல்தான் இபிஎல் வெற்றியாளர்கள் என்று விமர்ச­கர்கள் நிர்ணயித்துவிட்டனர். ஆனால், இப்போது நாங்கள் பட்டியலில் முன்னணி வகிப்பதற்­கான வாய்ப்பு உள்ளது," என்றார் அவர்.
கடந்த திங்கட்கிழமை நடை­பெற்ற வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவுடனான ஆட்டத்தில் லிவர்­பூல் 1=1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. இதனால் லீக் பட்டியலில் மேன்சிட்டியைவிட ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கக்கூடிய வாய்ப்பை லிவர்பூல் இழந்தது.
பட்டியலில் 12வது இடத்தில் உள்ள வெஸ்ட் ஹேம், லிவர்பூல் உடனான ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி இருந்தால் லிவர்­பூலை வீழ்த்தி மூன்று புள்ளி­ களைப் பெற்றிருக்கக்கூடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!