மீண்டும் முதலிடத்தில் மேன்சிட்டி

லிவர்பூல்: இந்தக் காற்பந்துப் பருவத்தின் தொடக்கம் முதலே இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து, பின் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி இரண்டாமிடத்திற்குச் சறுக்கிய மான்செஸ்டர் சிட்டி குழு மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.
குடிசன் பார்க் விளையாட்டரங் கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் மேன்சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் எவர்ட்டனை வீழ்த்தியது. இரு பாதிகளின் இறுதியிலும் இடைநிறுத்தத்திற் காக சேர்க்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அந்த கோல்கள் விழுந்தன. முதல் கோலை லப்போர்ட்டேவும் இரண்டாவது கோலை கேப்ரியல் ஜெசுஸும் போட்டனர்.
ஆட்டத்தின் நாயகனாகத் திகழ்ந்தாலும் வெற்றிக்கு அனை வரும் பங்களித்தனர் என்று தன் னடக்கத்துடன் கூறினார் ஜெசுஸ்.
இந்த வெற்றியின்மூலம் மேன் சிட்டி 62 புள்ளிகளுடன் முதல் நிலைக்குத் தாவியது. லிவர்பூல் குழுவும் 62 புள்ளிகளைப் பெற்று உள்ளபோதும் கோல் வித்தியாசத் தில் பின்தங்கியதால் அது இரண் டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதே நேரத்தில், லிவர்பூல் குழுவைக் காட்டிலும் மேன்சிட்டி கூடுதலாக ஓர் ஆட்டத்தில் விளை யாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு ஐந்து புள்ளிகளை மட்டும் குறை வாகப் பெற்று மூன்றாமிடத்தில் இருப்பதால் இந்தப் பருவ இபிஎல் பட்டத்திற்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!