பார்சிலோனா: ஸ்பானிய அரசர் கிண்ணக் காற்பந்துத் தொடரில் ரியால் மட்ரிட் - பார்சிலோனா குழுக்கள் மோதிய அரையிறுதிச் சுற்று முதல் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆறாம் நிமிடத்தில் லூக்கஸ் வாஸ்கெஸ் அடித்த கோல் மூலம் ரியால் முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2ஆம் பாதியில் பிரேசில் வீரர் மால்கம் பதில் கோலடிக்க, தோல்வியின் பிடியில் இருந்து பார்சிலோனா தப்பியது. இருப்பினும், பார்சிலோனாவின் நூகாம்ப் அரங்கில் கோல் அடித்த சாதகத்துடன் இம்மாதம் 27ஆம் தேதி தனது சொந்த அரங்கில் நடக்கவுள்ள 2வது அரையிறுதி ஆட்டத்தில் பார்சி லோனாவை ரியால் எதிர்கொள்கிறது.
முடிவு ரியாலுக்குச் சாதகம்
1 mins read
-

