பதிலடி தர இந்தியா முனைப்பு

ஆக்லாந்து: இதற்குமுன் இல்லாத வகையில் ஓட்ட வித்தியாச அடிப்படையில் டி20 போட்டிகளில் தனது ஆக மோசமான தோல்வி யைப் பதிவுசெய்த இந்திய கிரிக் கெட் அணி, அதிலிருந்து மீண்டு நியூசிலாந்து அணிக்குப் பதிலடி தரும் முனைப்புடன் இருக்கிறது.
முன்னதாக நடந்த ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி வெறும் 92 ஓட்டங் களில் ஆட்டமிழந்து, மோசமாகத் தோற்றது. ஆயினும், கடைசி, ஐந்தாவது ஒருநாள் போட்டியில் எழுச்சியுடன் ஆடி நியூசிலாந்து அணியைத் தோற்கடித்தது.
அதேபோல, வெலிங்டனில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. எப்போ துமே இலக்கை விரட்டுவதில் முன்னணியில் இருக்கும் இந்திய அணி, அந்தப் போட்டியில் எட்டுப் பந்தடிப்பாளர்களுடன் விளையா டியபோதும் சோபிக்கத் தவறியது.
இந்த நிலையில், அந்தப் போட்டியில் இழைத்த தவறுகளைத் திருத்திக்கொண்டு இன்றைய ஆட்டத்தில் வெற்றி நம்பிக்கை யுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டுமெனில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டியது அவசியம்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகிழ்ச்சியை சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பங்ளாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் (வலக்கோடி). படம்: இணையம்

26 Jun 2019

பங்ளாதேஷ் அசத்தல் வெற்றி