யுனைடெட்டுக்காக காத்திருக்கும் ரெனியேரி

லண்டன்: இன்றிரவு 8.30 மணிக்கு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத் தில் ஃபுல்ஹம் குழுவும் மான் செஸ்டர் யுனைடெட் குழுவும் மோதுகின்றன.
யுனைடெட்டின் முன்னாள் நட்சத்திர வீரரான நார்வேயைச் சேர்ந்த ஒலே குனார் சோல்சியார் அக்குழுவின் இடைக்கால நிர்வாகியாகப் பதவியேற்றதிலி ருந்து யுனைடெட் தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது.
கடந்த பத்து ஆட்டங்களில் தோல்வியைத் தழுவாத யுனை டெட் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
சோல்சியாரின் தலைமை யின்கீழ் யுனைடெட் அதன் தாக்குதல் பாணி அணுகுமுறை யைக் கடைப்பிடித்து வெற்றியை ருசித்து வருகிறது.
தற்போது லீக் பட்டியலில் நான்காவது இடத்தில் செல்சி யைவிட யுனைடெட் இரண்டு புள்ளிகள் மட்டுமே குறைவாகப் பெற்றுள்ளது.
மாறாக, இரண்டாம் நிலை லீக்குக்குத் தள்ளப்படும் அபாயத்தை ஃபுல்ஹம் எதிர் நோக்குகிறது.
கடந்த ஐந்து ஆட்டங்களில் ஒரே ஓர் ஆட்டத்தில் மட்டும் அது வெற்றி பெற்றது.
ஆனால் இதை எல்லாம் கண்டு ஃபுல்ஹமின் நிர்வாகி கிளோடியோ ரனியேரி கவலைப் படுவதாக தெரியவில்லை. யுனைடெட்டின் வெற்றிப் பயணம் கண்டிப்பாக ஒரு முடிவுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார். அதிலும் இன்றைய ஆட்டத்தில் நிகழக்கூடும் என்று அவர் தெரி வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!