வெஸ்ட் இண்டீஸ் = இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் இன்று துவக்கம்

செயிண்ட் லூசியா: வெஸ்ட் இண்டீஸ் = இங்கிலாந்து இடை யிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயிண்ட் லூசியாவில் இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளை யாடி வருகிறது. 
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. 
இந்த டெஸ்ட்டிலும் வென்று இங்கிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. 
அணித் தலைவர் ஹோல் டருக்கு ஒரு போட்டியில் விளை யாடத் தடை விதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 
என்றாலும் பிராத்வைட், ஷே ஹோப், ஹெட்மையர், டவ்ரிச் பந்தடிப்பிலும் ரோச், கேப்ரியல், ஜோசஃப் பந்துவீச்சிலும் சிறப் பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து ஆறுதல் வெற்றிக் காக துவண்டுவிடாமல் கடைசி வரை போராடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. 
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏமாற்றத்தைச் சந்தித்த இங்கிலாந்து இம்முறை எதிரணியை வீழ்த்தும் முனைப் புடன் உள்ளது.