நியூசிலாந்தைப் புரட்டி எடுத்த இந்திய அணி

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வாகை சூடியுள்ளது.
 மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தினர்.
நியூசிலாந்து = இந்தியா இடை யிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. 
முதலில் பந்தடித்த நியூசிலாந்து 8 விக்கெட்டு இழப்புக்கு 158 ஓட்டங்கள் சேர்த்தது. 
பின்னர் 159 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பந்தடிக்க தொடங்கியது.
தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். 
ரோகித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்து களில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 
ரோகித் சர்மா 35 ஓட்டங்களை எடுத்தபோது அனைத்துலக டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்திருந்த நியூசிலாந்து பந்தடிப்பாளர் மார்ட்டின் கப்டிலை (2,272) பின்னுக்குத் தள்ளி முதல் இடம்பிடித்தார்.
இந்தப் போட்டிக்கு முன் ரோகித் சர்மா 2,238 ஓட்டங்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தார். 
இந்தப் போட்டியில் 50 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் 2,288 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். 
ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் 4 சதங்கள், 15 அரைசதங்கள் விளாசியுள்ளார். பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் 2,263 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 
நேற்று ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா = தவான் ஜோடி 9.2 ஓவரில் 79 ஓட்டங்கள் குவித்தது.
ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும் தவானுடன் ரிஷப் பன்ட் ஜோடி சேர்ந்தார். 
தவான் 31 பந்துகளில் 30 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஜய் சங்கர் 8 பந்துகளில் 14 ஓட்டங்கள் சேர்த்தார்.

 

Loading...
Load next