வாழ்வா சாவா ஆட்டத்தில் மோதும் மேன்சிட்டி, செல்சி

பெல்ஜிய நாட்டவர்களான மேன்சிட்டியின் கெவின் டி பிரய்ன (இடது), செல்சியின் ஈடன் ஹசார்ட் இருவரும் இன்றைய ஆட்டத்தை வெல்லக்கூடியவர்களாக திகழக்கூடும். படங்கள்: ஏஎஃப்பி, இபிஏ

மான்ஸெஸ்டர்: இங்கிலிஷ் பிரி­மியர் லீக் காற்பந்துப் போட்டி ஒன்றில் இவ்வாரம் எவர்ட்டன் குழுவை அதன் சொந்த மண்ணில் 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்ததன் மூலம் லிவர்பூலை முந்தி பட்டியலில் முதலிடத்திற்கு மான்செஸ்டர் சிட்டி குழு சென்றது.
ஆனால், முதலிடத்தைத் தக்க­வைத்துக்கொள்ள வேண்டும் எனில், இன்று நள்ளிரவு நடைபெற உள்ள செல்சியுடனான விறுவிறுப்­பான ஆட்டத்தில் மேன்சிட்டி வெல்ல வேண்டும்.
லிவர்பூலுக்கு நிகராக 62 புள்ளிகளைப் பெற்றிருக்கும் மேன்­சிட்டி, கோல் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. 
ஆனால், நேற்றிரவு போர்ன்மத் குழுவுடனான ஆட்டத்தில் லிவர்பூல் வென்றாலோ அல்லது சமநிலை கண்டாலோ மீண்டும் அக்குழு முதலிடத்தைப் பிடித்து­ விடும்.
இதனால், லிவர்பூலுக்கு நெருக்­கடியைத் தர வேண்டும் எனில், பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள செல்சியைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்­திற்கு மேன்சிட்டி தள்ளப்பட்டு உள்ளது.
ஆனால் செல்சியை வீழ்த்துவது சிட்டிக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. அண்மையயில் செல்சி விளையாடிய ஆட்டங்களில் அதன் ஆட்டத்திறன் சற்று குறைந்திருந்தாலும் அக்குழுவைக் குறைத்து எடைபோட்டுவிட முடி­ யாது. 
இப்பருவத்தில் சிட்டியை வீழ்த்திய முதல் குழு செல்சி என்பதே அதற்குக் காரணம். கடந்த டிசம்பரில் தனது சொந்த மண்ணில் சிட்டியை அது 2=0 எனும் கோல் கணக்கில் வென்று இருந்தது.
ஆர்சனல், போர்ன்மத் குழுக்­களிடம் அண்மையில் செல்சி எதிர்பாராமல் தோற்றிருந்தாலும், அர்ஜெண்டினா தாக்குதல் நட்சத்­திரம் கொன்ஸாலோ ஹிகுவெயி­ னின் வருகையால் அக்குழுவிற்கு புதுத்தெம்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.  அதுவும், பெல்ஜிய ஆட்டக்காரர் ஈடன் ஹசார்ட்டுடன் அவர் கூட்டு சேர்ந்தால் எதிர் அணிக்கு செல்சி எந்நேரமும் ஆபத்தானதாக தோன்றும்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புல்வாமா தாக்குதலில் மாண்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதியளிப்பதற்கான காசோலையை சென்னையில் நேற்று முன்தினம் துணை ராணுவப் படை அதிகாரியிடம் சிஎஸ்கே அணித் தலைவர் டோனி வழங்கினார். படம்: ஏஎஃப்பி

25 Mar 2019

சென்னை ஆடுகளம் மீது டோனி அதிருப்தி