வாழ்வா சாவா ஆட்டத்தில் மோதும் மேன்சிட்டி, செல்சி

வாழ்வா சாவா ஆட்டத்தில் மோதும் மேன்சிட்டி, செல்சி

2 mins read
b1af1a30-8ff0-41c7-a183-462e654567ba
பெல்ஜிய நாட்டவர்களான மேன்சிட்டியின் கெவின் டி பிரய்ன (இடது), செல்சியின் ஈடன் ஹசார்ட் இருவரும் இன்றைய ஆட்டத்தை வெல்லக்கூடியவர்களாக திகழக்கூடும். படங்கள்: ஏஎஃப்பி, இபிஏ -

மான்ஸெஸ்டர்: இங்கிலிஷ் பிரி­மியர் லீக் காற்பந்துப் போட்டி ஒன்றில் இவ்வாரம் எவர்ட்டன் குழுவை அதன் சொந்த மண்ணில் 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்ததன் மூலம் லிவர்பூலை முந்தி பட்டியலில் முதலிடத்திற்கு மான்செஸ்டர் சிட்டி குழு சென்றது. ஆனால், முதலிடத்தைத் தக்க­வைத்துக்கொள்ள வேண்டும் எனில், இன்று நள்ளிரவு நடைபெற உள்ள செல்சியுடனான விறுவிறுப்­பான ஆட்டத்தில் மேன்சிட்டி வெல்ல வேண்டும். லிவர்பூலுக்கு நிகராக 62 புள்ளிகளைப் பெற்றிருக்கும் மேன்­சிட்டி, கோல் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், நேற்றிரவு போர்ன்மத் குழுவுடனான ஆட்டத்தில் லிவர்பூல் வென்றாலோ அல்லது சமநிலை கண்டாலோ மீண்டும் அக்குழு முதலிடத்தைப் பிடித்து­ விடும். இதனால், லிவர்பூலுக்கு நெருக்­கடியைத் தர வேண்டும் எனில், பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள செல்சியைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்­திற்கு மேன்சிட்டி தள்ளப்பட்டு உள்ளது. ஆனால் செல்சியை வீழ்த்துவது சிட்டிக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. அண்மையயில் செல்சி விளையாடிய ஆட்டங்களில் அதன் ஆட்டத்திறன் சற்று குறைந்திருந்தாலும் அக்குழுவைக் குறைத்து எடைபோட்டுவிட முடி­ யாது. இப்பருவத்தில் சிட்டியை வீழ்த்திய முதல் குழு செல்சி என்பதே அதற்குக் காரணம். கடந்த டிசம்பரில் தனது சொந்த மண்ணில் சிட்டியை அது 2=0 எனும் கோல் கணக்கில் வென்று இருந்தது. ஆர்சனல், போர்ன்மத் குழுக்­களிடம் அண்மையில் செல்சி எதிர்பாராமல் தோற்றிருந்தாலும், அர்ஜெண்டினா தாக்குதல் நட்சத்­திரம் கொன்ஸாலோ ஹிகுவெயி­ னின் வருகையால் அக்குழுவிற்கு புதுத்தெம்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதுவும், பெல்ஜிய ஆட்டக்காரர் ஈடன் ஹசார்ட்டுடன் அவர் கூட்டு சேர்ந்தால் எதிர் அணிக்கு செல்சி எந்நேரமும் ஆபத்தானதாக தோன்றும்.