சீன நிறுவனத்துடன்  ரூ.50 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்த பி.வி.சிந்து

ஹைதராபாத்: சீனாவின் லி நிங் விளையாட்டு நிறுவனத்­துடன் இந்தியாவின் நட்சத்திர பூப்பந்து வீராங்கனையான பி.வி. சிந்து, ரூ.50 கோடி மதிப்­பிலான (S$9.5 மில்லியன்) விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். 
நான்கு ஆண்டிற்கான இந்த விளம்பர ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
உலகப் பூப்பந்தில் கையெழுத்­திடப்பட்ட மிகப் பெரிய ஒப்பந்தங்­ களில் ஒன்றாக சிந்து­வின் இந்த ஒப்பந்தமும் இடம்­ பெறுகிறது. 
ஒப்பந்தமான இந்த ரூ.50 கோடியில், ரூ.40 கோடி விளம்பர ஆதரவுக்கும் ரூ.10 கோடி விளையாட்டு உபகரணங்­களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது  என அந்நிறுவனத்தின் பிரதான பங்குதாரரான மகேந்தர் கபூர் தெரிவித்துள்ளார். 
மேலும் இந்த ஒப்பந்தத்திற்­கான தொகை, ‘பூமா’ விளை­ யாட்டு  நிறுவனத்திற்கும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராத் கோஹ்லிக்கும் இடையே  ஒப்பந்தமான தொகைக்கு இணையானதாகும் எனவும் அவர் கூறினார்.
பிரேசிலின் ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டுப் போட்டி மற்றும் உலக வெற்றியாளர் கிண்ணப் போட்டி­யில் வெள்ளிப் பதக்கம் வென்று பி.வி. சிந்து சாதனை படைத்து இருந்தார்.
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக பி.வி. சிந்து திகழ்கிறார். 
மேலும், உலகளவில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீராங்­கனைகள் தொடர்பாக ‘ஃபோர்ப்ஸ்’ சஞ்சிகை வெளி­யிட்ட பட்டியலில், பி.வி. சிந்து ஏழாவது இடத்தைப் பிடித்து இருந்தார்.
லி நிங் நிறுவனம் ஏற்கெனவே 2014/15 ஆண்டில் ரூ.1.25 கோடிக்கு சிந்துவை ஒப்பந்தம் செய்திருந்தது. 
பின்னர் 2016ஆம் ஆண்டில் ‘யோனெக்ஸ்’ நிறுவனம் ஆண்டுக்கு ரூ.3.5 கோடி என்ற விகிதத்தில், மூன்று ஆண்டு­களுக்கு அவரை ஒப்பந்தம் செய்தது. 
தற்போது இரண்டாவது முறையாக அதிக அளவிலான தொகைக்கு சிந்துவை லி நிங் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்­ கிறது.
இதேபோல கடந்த மாதம் இந்தியப் பூப்பந்து வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், இந்நிறுவனத்­துடன் ரூ.35 கோடி மதிப்பில் நான்கு ஆண்டு­ ஒப்பந்தத்தில் கையெ­ ழுத்திட்டார்.
லி நிங் நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் ஈராண்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. 
அதன் ஒரு பகுதியாக, 2020ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர்  தோக்கி­யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான உடை­கள், காலணி ஆகியவற்றை இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த நிறு­வனம் வழங்கவுள்ளது என்பது குறிப்­பிடத்தக்கது.

 

Loading...
Load next