லாஸ் ஏஞ்சலிசில் டேவிட் பெக்கமுக்கு சிலை திறப்பு

லாஸ் ஏஞ்சலிஸ்: இங்கிலாந்து காற்பந்துக் குழுவின் முன்னாள் தலைவரான டேவிட் பெக்கம்மை (படம்) கௌரவப்படுத்தும் வகை­யில் அவருக்குச் சிலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
அமெரிக்க காற்பந்து லீக்கின் லாஸ் ஏஞ்சலிஸ் கேலக்சி குழுவில் அவர் விளையாடி வருகிறார். மார்ச் 2ஆம் தேதி அடுத்த பருவம் தொடங்குவதற்குமுன் அக்குழு­வின் விளையாட்டரங்கிற்கு வெளியே அவரது சிலை திறந்து வைக்கப்படும் என்று கேலக்சி குழு நேற்று முன்தினம் தெரிவித்­ தது. அமெரிக்கக் காற்பந்து லீக் ஆட்டக்காரர் ஒருவருக்குச் சிலை திறந்து வைக்கப்படுவது இதுவே முதன்முறை.
மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மட்ரிட் குழுக்களில் விளை­யாடிய முன்னாள் வீரரான பெக்கமுக்கு, 2007ஆம் ஆண்­ டில் அமெரிக்கக் காற்பந்து லீக்கில் சேர்ந்த முதல் பிரபல ஐரோப்­பிய ஆட்டக்காரர் என்ற பெருமை சேரும். 
கேலக்சி குழுவில் ஆறு ஆண்டுகள் விளையாடியுள்ள பெக்கம், அக்குழு 2011 மற்றும் 2012ல் வெற்றியாளர் பட்டத்தை வெல்ல உறுதுணையாக இருந்தார். அவருடைய காலடிச்சுவடுகளைப் பின்பற்றி தலைசிறந்த மற்ற ஐரோப்­பிய ஆட்டக்காரர்களும் அமெரிக்க காற்பந்து லீக்கில் சேர்ந்தனர்.