‘இலங்கை அணியில் திறமையான வீரர்கள் உருவாகவில்லை’

சென்னை: இலங்கை அணியில் கடந்த நான்கு ஆண்டுகளில் திறமையான வீரர்கள் உருவாக வில்லை என்று அந்நாட்டுக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் களிடம் பேசிய முத்தையா, “உலகக் கிண்ணப் போட்டியில் மூன்று முறை இறுதிச் சுற்றுக் குச் சென்ற இலங்கை அணி தற்போது மோசமான நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது,” என்றார்.
“நாங்கள் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் பணம் பெரிய விஷயமாக இல்லை. விக்கெட், ஓட்டம் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தினோம். ஆனால் இப்போதைய நிலைமை வேறாக உள்ளது. 
“பணத்துக்கு மதிப்பு கொடுத்தால் கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிடும்,” என்று அவர் கூறினார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கை வீரர் ஏஞ்சலோ பெரேராவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெலுக்வாயோ. படம்: ஏஎஃப்பி

21 Mar 2019

சூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா