மீண்டும் முதலிடத்தில் லிவர்பூல்

நேற்றைய ஆட்டத்தில் லிவர்பூலின் செனகல் நாட்டு தாக்குதல் ஆட்டக்காரரான சாடியோ மானேயின் இந்த கோல் போடும் முயற்சி வெற்றி பெறவில்லை. படம்: ஏஎஃப்பி

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதை வெற்றி பெறும் முனைப்பில் உள்ள லிவர்பூல் குழு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் போர்ன்மத் குழுவை 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது.
இதன் மூலம் பிரிமியர் லீக் தர வரிசைப்பட்டியலில் லிவர்பூல் முதலிடத்துக்கு மீண்டும் திரும்பி யுள்ளது. அத்துடன், போர்ன்மத் குழுவை எட்டாவது தொடர் தோல்விக்கும் அது தள்ளியது.
இதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் எவர்ட்டனை மேன்சிட்டி தோற்கடித்து கோல் வித்தியாசத்தில் லிவர்பூலை முந்திக்கொண்டு முதலிடத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதலிடத்துக் கான போட்டியில் லிவர்பூலுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என்ற பேச்சுகளைத் தவிடுபொடியாக்கும் விதமாக லிவர்பூல் சர்வசாதாரண மாக போர்ன்மத் குழுவைத் தோற் கடித்துள்ளது.
தொடக்கத்தில் சற்றுத் தட்டுத் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய லிவர்பூல், சாடியோ மானே மூல மாக முதல் கோலை ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் போட்டது.
இதன்மூலம் லிவர்பூலுக்கு தொடர்ச்சியாக நான்கு ஆட்டங் களில் கோல் போட்டவராகிறார் சாடியோ மானே.
பின்னர் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு லிவர்பூ லின் ஜார்ஜினோ வைன்ஹால்டம் தமக்குக் கிடைத்த பந்தை போர்ன்மத் கோல்காப்பாளருக்கு மேலே கோல் வலையை நோக்கி அடித்த பந்து கோலானது.
இறுதியில் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங் களில் லிவர்பூலின் ஃபெர்மினோ கொடுத்த பந்தை அழகாக போர்ன்மத் கோல்காப்பாளரின் கைகளுக்கு எட்டாத வகையில் பந்தை கோல் வலைக்குள் புகுத்தி லிவர்பூலின் மூன்றாவது கோலை போட்டார் முகமது சாலா.
இந்தப் பருவத்தில் இது சாலா வின் 20வது கோலாகும். 
அத்துடன், லிவர்பூல் அணிக்கு மானே, ஃபெர்மினோ, சாலா ஆகி யோர் இணைந்து ஆகக் கடைசி யாக போட்ட 15 கோல்களில் 14 இவர்களின் அபார ஆட்டத்தின் காரணமாக விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் கூட்டணி ஆட்டம் தொடர்ந்தால் லிவர்பூல் அணி பிரிமியர் லீக் விருதை இந்தப் பருவத்தில் தட்டிச் செல்வது சாத்தியமான ஒன்றே என்கின்றனர் காற்பந்து விமர்சகர்கள்.