டி20: இந்தியாவைத் தோற்கடித்து கிண்ணத்தை வென்றது நியூசிலாந்து

ஹேமில்டன்: ஹேமில்டனில் நடந்த இந்திய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது 'டி20' போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2-1 என்ற கணக்கில் தொடரை நியூ சிலாந்து அணி கைப்பற்றியது.
கடந்த பத்து 'டி20' தொடர் களில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இதுவரை நடந்த 10 தொடர் களில் 9 தொடர்களில் வெற்றியும் ஒரு தொடரை மட்டும் சமன் செய்திருந்தது இந்திய அணி.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக கோலின் முன் ரோவும், தொடர் நாயகனாக டிம் சீபெர்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங், ஓட்டங்களைக் கட்டுப் படுத்த முடியாத பந்துவீச்சு, கேட்சுகளைத் தவறவிட்டது போன்றவை தோல்விக்கான காரணமாக அமைந்தது.
'டாஸ்' வென்ற இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அணித் தலைவர் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, டோனி 2 ஓட்டம் என அடுத்தடுத்து ஆட்ட மிழந்ததால் இந்திய அணி தடு மாறியது. பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-குருனால் பாண்டியா ஜோடி அணி, வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல கடைசி வரை முயற்சி செய்தது.
இருப்பினும் இந்திய அணியால் இருபது ஓவர்களில் 208 ஓட் டங்கள் மட்டுமே எடுக்க முடிந் தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!