இங்கிலிஷ் காற்பந்து: லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி லிவர்பூல் அணிக்கு மகுடத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை

இங்கிலிஷ் காற்பந்து: லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி லிவர்பூல் அணிக்கு மகுடத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை

1 mins read
4962014a-e2b1-4ece-85ab-4fc94110e1b5
-

தமது சொந்த அரங்கில் நேற்று மான்செஸ்டர் சிட்டி 6-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வென்று 65 புள்ளிகளுடன் லீக் பட்டியலின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதல் பாதியிலேயே 4 கோல்களைப் புகுத்தி செல்சியின் தோல்வியை உறுதி செய்தது மான்செஸ்டர் சிட்டி.

இவ்வாட்டத்தில் சிட்டியின் முன்னணி ஆட்டக்காரர் சர்ஜியோ அகுவேரோ 3 கோல்களைப் புகுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலின் இரண்டாம் இடத்தில் லிவர்பூல் குழு 65 புள்ளிகளுடனும் மூன்றாம் இடத்தில் ஸ்பர்ஸ் குழு 60 புள்ளிகளுடனும் மாபெரும் மகுடத்திற்காக போட்டியிடுகின்றன.