ஒன்றுமே புரியவில்லை: புலம்பும் மொரிசியோ சாரி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் செல்சியை 6=0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி நேற்று அதிகாலை பிழிந்து எடுத்தது.
இந்தப் படுதோல்வி செல்சி நிர்வாகி மொரிசியோ சாரியை அதிர்ச்சியில் உறைய வைத் துள்ளது. தமக்கு ஒன்றுமே புரியவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் புலம்பினார்.
“இந்தப் படுதோல்வி குறித்து என்னால் விளக்கம் அளிக்க முடியவில்லை. பயிற்சியின்போது சிறப்பாகச் செயல்பட்டோம். ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களில் சிட்டி கோல் போட்டதும் எனது வீரர்கள் துவண்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். எங்களால் விளையாட முடியாமல் போனது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வலிமைமிக்க குழுவுக்கு எதிராக விளையாடியபோது நிறைய தவறுகளைச் செய்துவிட்டோம்,” என்று சாரி கூறினார்.
1991ஆம் ஆண்டில் நாட்டிங் ஹம் ஃபாரஸ்ட் குழுவுக்கு எதிராக 7=0 எனும் கோல் கணக்கில் தோற்ற பிறகு, நேற்றைய ஆட்டத்தில்தான் செல்சி மிக மோசமான முறையில் தோல்வியைத் தழுவியுள்ளது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது. இது அக்குழுவின் வீரர்களை மனந்தளரச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

21 Apr 2019

‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவிற்கு எதிரான யூரோப்பா லீக் காலிறுதி இரண்டாம் ஆட்டத்தில் முற்பாதியிலேயே செல்சி நான்கு கோல்களை அடித்தது. முதல் கோலை அடித்து செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்த பெட்ரோவே (இடது) அக்குழுவின் கோல் வேட்டையையும் முடித்து வைத்தார். அவரைப் பாராட்டும் சக செல்சி ஆட்டக்காரர் செஸார் அஸ்பிலிகுவெட்டா. படம்: ராய்ட்டர்ஸ்

20 Apr 2019

அரையிறுதியில் ஆர்சனல், செல்சி