சங்ககாரா: கோஹ்லி உலகின் சிறந்த பந்தடிப்பாளர்

கொழும்பு:  இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி உலகின் தலைசிறந்த பந்தடிப்பாளர் என இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் சங்ககாரா புகழாரம் சூட்டியுள்ளார். 
“உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராத் கோஹ்லி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபார மாக விளையாடி நம்ப முடியாத வகையில் ஓட்டங்களைக் குவிக் கிறார். கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்துக்கும் சிறந்த பந்தடிப்பாளராக இருக்கிறார்,” என்று சங்ககாரா தெரிவித்தார்.
விராத் கோஹ்லி அனைத்துலகப் போட்டிகளில் இதுவரை 64 சதங்கள் அடித்துள்ளார். சச்சினின் 100 சத சாதனையை அவர் முறியடிப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. சங்ககாரா 63 சதங்களை விளாசியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்

தலையால் முட்டி பிரேசிலின் முதல் கோலைப் போடும் காசிமிரோ. படம்: ராய்ட்டர்ஸ்

24 Jun 2019

கோப்பா அமெரிக்கா காற்பந்து: காலிறுதிச் சுற்றுக்கு பிரேசில், வெனிசுவேலா தகுதி