புதுடெல்லி: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங் கெடுக்கும் இந்திய அணியில் இடம்பெற ரிஷப் பன்ட், விஜய் சங்கர், ரகானே ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தத் தகவலை இந்திய அணிக்கான தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். 12வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரும் மே மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அணிகளைத் தேர்வு செய்ய அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) விதித்துள்ள கடைசி தேதியான ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைமை தேர்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியில் நான் காவது இடத்தில் களம் இறங்கி பந்தடிப்பது யார் என்பதைத்தான் இதுவரை முடிவு செய்யவில்லை. மற்ற இடங்களுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித் திருந்தது. ரிஷப் பன்ட்டின் ஆட்டம் கடந்த ஓர் ஆண்டாகவே மிகவும் சிறப் பாக உள்ளது. அவர் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார். மூன்று வகை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். விஜய் சங்கர் பந்தடிப்பு, ஆல்ரவுண்டர் வரிசையில் இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆடினார். ரகானே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த மூன்று பேரும் உலகக் கிண்ண அணியில் இடம்பிடிக்க கடுமையாகப் போட்டி போடுகின்றனர். உலகக் கிண்ணத்தை ஆஸ்திரேலியா ஐந்து முறையும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா இரண்டு முறையும் கைப்பற்றியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.
உலகக் கிண்ண அணியில் இடம்பெற கடும் போட்டி
2 mins read

