ஸ்பர்சுக்கு சவால்மிக்க ஆட்டம்: சான்சோ எச்சரிக்கை

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கி லாந்தின் ஸ்பர்சும் ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மண்ட் குழுவும் நாளை அதிகாலை மோதுகின்றன்.
இந்த காலிறுதிக்கு முந்திய ஆட்டம் ஸ்பர்சின் விளையாட்டரங் கத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், டோர்ட்மண்ட் குழுவுக்காக விளையாடும் இங்கி லாந்தின் தாக்குதல் ஆட்டக் காரர் ஜேடன் சான்சோ ஸ்பர்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"கடந்த பருவத்தில் நாங்கள் ஸ்பர்சிடம் தோல்வியைத் தழுவி னோம்.
"அப்போது ஸ்பர்சின் விளை யாட்டரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நான் விளையாட வில்லை. டோர்ட்மண்ட்டின் விளையாட்டரங்கத்தில் நடை பெற்ற ஆட்டத்தில் நான் விளை யாடினேன். அந்த ஆட்டத்தில் நாங்கள் தோல்வி அடைந்தோம். வலிமைமிக்க ஸ்பர்ஸ் குழு எங்களுக்கு எதிராக களமிறங் குகிறது.
"நாளைய ஆட்டம் ஸ்பர்சுக்கு சவால்மிக்க ஆட்டமாக அமையும். ஹேரி கேன், டெலி அலி ஆகிய நட்சத்திர வீரர்கள் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஸ்பர்சுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு.
"கடந்த பருவத்துடன் ஒப்பிடுகையில் நாங்கள் தற்போது மேம்பட்டுள்ளோம். எனவே, நாளைய ஆட்டம் கடந்த பருவத்தில் நடைபெற்ற ஆட்டத்தைப் போல இருக்காது," என்று சான்சோ தெரிவித்தார்.
18 வயது சான்சோ சிறப்பாகச் செயல்பட்டு டோர்ட்மண்ட் குழுவின் முக்கிய ஆட்டக்காரர் களில் ஒருவராக திகழ்கிறார்.
அதுமட்டுமல்லாது, மான் செஸ்டர் சிட்டியின் முன்னாள் ஆட்டக்காரரான சான்சோ இங்கிலாந்துக்காகவும் மூன்று முறை களமிறங்கி உள்ளார்.
ஸ்பர்சின் ஆட்டக்காரர்கள் பலருடன் சான்சோ நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்.
"வெற்றி பெறுவோம் என்ற அசைக்க முடியா நம்பிக்கையுடன் ஸ்பர்ஸ் ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். ஆனால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறேன்," என்றார் சான்சோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!