தோல்வியைத் தழுவியது யுனைடெட்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து குழு நிர்வாகியாகப் பதவி ஏற்றதிலிருந்து முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்துள்ளார் ஒலே குனார் சோல்ஷார்.

இன்று அதிகாலை அதன் சொந்த அரங்கில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் அது 2-0 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு குழுவான பி.எஸ்.ஜியிடம் தோல்வி கண்டது.

இந்நிலையில், அது போட்டியின் கால்இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது கடினமாகியுள்ளது. ஏனெனில் சிவப்பு அட்டை பெற்றுள்ளதால் அடுத்த மாதம் 6ஆம் தேதி இவ்விரு குழுக்களும் மீண்டும் பொருதும்போது அக்குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் பால் பொக்பா இடம்பெற மாட்டார்.

இன்று நடந்த மற்றொரு சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ரோமா குழு 2-1 என்ற கோல் கணக்கில் எஃப்சி போர்த்தோ குழுவை வென்றது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘சிக்சர்’களையும் ‘பவுண்டரி’களையும் விளாசி அசத்திய இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி