சோல்சியார்: மலைகள் கடந்து   செல்லத்தான் இருக்கின்றன

பாரிஸ்: இங்கிலாந்தின் மான்செஸ் டர் யுனைடெட் காற்பந்துக் குழு நிர் வாகியாகப் பதவி ஏற்றதி லிருந்து முதன்முறையாகத் தோல் வியைச் சந்தித்துள்ளார் ஒலே குனார் சோல்சியார்.
செவ்வாய்க்கிழமை பின்னிரவு அதன் சொந்த அரங்கில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனை டெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு குழுவான பி.எஸ்.ஜி.யிடம் தோல்வி கண்டது.
முதல் பாதி ஆட்டம் 0-0 என்ற சமநிலையில் முடிந்தாலும் இரண் டாம் பாதி ஆட்டத்தில் பிஎஸ்ஜியின் வேகத்துக்கு யுனைடெட்டால் ஈடு கொடுக்க முடியவில்லை. மேலும் முன்னணி ஆட்டக்காரர்கள் அந் தனி மார்சியால், ஜெஸி லிங்கார்ட் ஆகியோர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகவேண்டி இருந்தது. அதனால் யுனைடெட் டின் வேகமும் குறைந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிஎஸ்ஜியின் தற்காப்பு ஆட்டக் காரர் கிம்பெம்பே கார்னர் வாய்ப்பு ஒன்றை கோலாக்கினார். அதன் பின்னர் யுனைடெட் தாக்குதல் களை முடுக்கிவிட்டாலும் பயன் இல்லை. எதிர்தாக்குதல் மேற் கொண்ட பிஎஸ்ஜி மின்னல் வேகத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் இம்பாப்பே மூலம் இரண்டாம் கோலையும் போட்டது.
யுனைடெட் கோல்காப்பாளர் டி கியா பிஎஸ்ஜி ஆட்டக்காரர் களின் பல கோல்  முயற்சிகளை முறியடித்தார். இல்லையென்றால் கோல் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி இருக்கும்.
இந்தத் தோல்வி யுனைடெட்டின் உண்மையான நிலையையும் பிஎஸ்ஜி குழுவின் தரம் வேறு ஒரு நிலையில் உள்ளது என்பதை யும் உணர்த்தினாலும் ‘மலைகள் இருப்பது கடந்து செல்லத்தான்’ என்று கூறியுள்ளார் சோல்சியார்.  
“எல்லாம் முடிந்துவிட்டது என வெள்ளைக்கொடி காட்டிவிட முடி யாது. இந்த ஆட்டம் வெவ்வேறு தரநிலைகளில் உள்ள அணி களைத் தெளிவாகக் காட்டியது. அந்த நிலைக்குத்தான் நாங்கள் வரவிரும்புகிறோம். பிஎஸ்ஜி மிக வும் திறமையான ஓர் அணி,” என் றார் ஒலே.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று அதிகாலை நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பிஎஸ்ஜி குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் கிம்பெம்பே, கார்னர் வாய்ப்பு ஒன்றை கோலாக்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது