மொயின்கான்: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மொயின்கான் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி யில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும் எனக் கூறியுள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியது இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணி வரும் உலக கிண்ணப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக் கும். 
அந்த அளவுக்கு எங்கள் அணி வீரர்களிடம் திறமையும் நம் பிக்கையும் இருக்கின்றன. இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கி லாந்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வெற்றியாளர் கிண் ணப் போட்டியில் எங்கள் அணி யினர் இந்திய அணியை வீழ்த்தினர். இங்கிலாந்தில் ஜூன் மாதம் இருக்கும் சீதோஷ்ண நிலை வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். எங்கள் அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறது.
கடந்த பல வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் பாகிஸ் தான் அணி நன்றாக செயல்பட்டு வருகிறது. மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நிலவும் வானி லையை கணிக்க முடியாது. ஆடு களம் ஈரப்பதம் கொண்டதாக இருக்கும். இவையெல்லாம் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான அம்ச மாகும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி 

19 Jun 2019

ஜப்பான் வீரர்களைத் திணறடித்த சிலி

'சி' பிரிவு ஆட்டத்தின்போது சிலியின் ஜோஸ் ஃபுவென்ஸாலிடா வும் (இடது) ஜப்பானின் டைகி சுகியோகாவும் இப்படி மோதிக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி

19 Jun 2019

அரை இறுதியை நோக்கி முன்னேறும் பங்ளாதேஷ்