பொருசியா டார்ட்மண்ட் குழுவை பந்தாடிய ஸ்பர்ஸ்

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தகுதிச் சுற்று ஆட்ட மொன்றில் நேற்று பொருசியா டார்ட்மண்ட் குழுவுடன் மோதிய இங்கிலாந்தின் ஸ்பர்ஸ் குழு டார்ட்மண்ட் குழுவை பந்தாடியது.
ஆட்டத்தின் இரண்டாம் பாதி யில் டார்மண்ட்டை திக்குமுக்காட வைத்து ஸ்பர்ஸ் குழு சர்வ சாதாரணமாக மூன்று கோல்கள் போட்டு 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் டார்ட்மண்ட் குழுவை போட்டுத் தள்ளியது.
முதல் பாதி ஆட்டத்தில் இரு குழுக்களுமே அதிகம் நகர முடியாமல் போன நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஸ்பர்ஸ் தனது முழுத் திறமையை வெளிக்காட்டியது.
பதினாறு குழுக்கள் பங்கேற்கும் இந்தத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இது முதல் சுற்றுதான்.
ஆனால் மறுமுறை ஸ்பர்ஸ் குழுவை சந்திக்கும்போது இந்த கோல் நிலையை சரிசெய்யும் வகை யில் விளையாடினால் மட்டுமே டார்ட்மண்ட் குழுவுக்கு காலிறுதிக் குச் செல்லும் வாய்ப்பு இருக்கும்.
தற்போதைய நிலையில் டார்ட்மண்ட் குழுவை புறந்தள்ளி காலிறுதிக்கு முந்திச் செல்லும் வாய்ப்பு ஸ்பர்சுக்கே இருப்பதாக காற்பந்து ரசிகர்கள் கூறுகின்றனர்.
நேற்றைய ஆட்டத்தில் இரண் டாம் பாதி தொடங்கிய இரண்டு நிமிடங்களில் ஸ்பர்சின் சோன் ஹியுங் மின் சக வீரர் வெர் டோங்கன் கொடுத்த பந்தை மிக லாவகமாக கோல் வலைக்குள் புகுத்தினார்.
பின்னர், ஆட்டத்தின் 83ஆம் நிமிடத்தில் வெர்டோங்கன் தமது பங்குக்கு சக வீரர் செர்கே ஆரியர் கொடுத்த பந்தை கோலாக்கினார்.
இதைத் தொடர்ந்து அடுத்த மூன்றாவது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சனிடமிருந்து கார்னர் வாய்ப்பின் மூலம் வந்த பந்தை தலையால் முட்டி கோல் வலைக்குள் புகுத்தினார் லேரோன்டே. காயம் காரணமாக ஹேரி கேன், டெலி அலி போன்ற நட்சத்திர வீரர்களை ஸ்பர்ஸ் இழந்த நிலையில் அந்த அணி வெற்றி பெறுவது கடினம் என்று கருதப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!