தினேஷ் கார்த்திக் நீக்கம்

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக் கெதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு உள்ளார்.
இந்தியா செல்லும் ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் அணி, அங்கு இரண்டு டி20 போட்டிகளிலும் ஐந்து போட்டிகளிலும் விளையாட உள்ளது.
உலகக் கிண்ணத் தொடருக்கு இந்திய அணி பங்கேற்கும் கடைசித் தொடர் இது என்பதால் இதில் விளையாடுவோரே உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அணியிலும் இடம்பெறலாம் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், ஒருநாள் போட் டிக்கான அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, 2வது விக்கெட் காப்பாளராக ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இன்னொரு தமிழக வீரரான விஜய் சங்கர் இரு வகைப் போட்டிகளுக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார்.
டி20 அணி: விராத் கோஹ்லி (அணித் தலைவர்), ரோகித் சர்மா, கே எல் ராகுல், ‌ஷிகர் தவான், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக், டோனி, ஹார்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, விஜய் சங்கர், யுஸ்வேந்திர சகல், ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கௌல், மயங்க் மார்க்கண்டே.
ஒருநாள் அணி (முதல் இரு போட்டிகளுக்கு): கோஹ்லி (அணித் தலைவர்), ரோகித், தவான், ராயுடு, கேதார் ஜாதவ், டோனி, ஹார்திக், பும்ரா, முகம்மது ஷமி, சகல், குல்தீப் யாதவ், சங்கர், பன்ட், கௌல், ராகுல்.
கடைசி மூன்று போட்டிகளுக் கான அணியில் சித்தார்த் கௌல் நீக்கப்பட்டு, புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். 24ஆம் தேதி முதல் டி20 போட்டி நடக்கிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், இளம் ஆல்ரவுண்டர் சேம் கரன் என இருவரை ஒரே ஓவரில் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய நேப்பாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லமிசானேவை (இடது) பாராட்டி மகிழும் டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

பழிதீர்க்கப்பட்ட பஞ்சாப்

இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே இந்தப் பருவத்தின் இத்தாலிய லீக் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் யுவென்டஸ் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள் (இடமிருந்து) யுவான் குவட்ரடோ, பிளேஸ் மட்விடி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்ரி கேன். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

ரொனால்டோ வரலாற்றுச் சாதனை