2030 உலகக் கிண்ணக் காற்பந்து: நான்கு நாடுகள் கூட்டாக நடத்த விருப்பம்

சான்டியாகோ: அர்ஜெண்டினா, சிலி, பராகுவே, உருகுவே ஆகிய நான்கு தென்னமெரிக்க நாடு களும் இணைந்து 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.
அர்ஜெண்டினா, பராகுவே, உருகுவே ஆகிய மூன்று நாடுக ளும் கூட்டாகச் சேர்ந்து விண் ணப்பித்துள்ள நிலையில் சிலியை யும் சேர்த்துக்கொள்ள அந்நாடுகள் இணங்கியிருப்பதாக சிலி அதிபர் செபாஸ்டியன் பினெரா தெரிவித் துள்ளார்.
மொரோக்கோ, பிரிட்டன், அயர் லாந்து, கிரீஸ், செர்பியா, பல்கே ரியா, ருமேனியா ஆகிய நாடுகளும் இந்தப் போட்டியில் குதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.