சோகத்திலிருந்து விடுபட்ட செல்சி

ஸ்டாக்ஹோம்: போர்ன்மத் குழு விடம் 4-0, மான்செஸ்டர் சிட்டி யிடம் 6-0 என எதிரணி அரங்கு களில் நடந்த ஆட்டங்களில் படுதோல்வி கண்டதால் சோர்ந்து போயிருந்த செல்சி காற்பந்துக் குழு, சுவீடனின் மால்மோ குழு விற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த யூரோப்பா லீக் ஐந்தாம் சுற்று முதல் சுற்று ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சோகத்தில் இருந்து மீண்டது.
மால்மோ தற்காப்பு ஆட் டக்காரர்கள் கவனக்குறை வுடன் இருந்த தருணத் தைச் சரியாகப் பயன் படுத்திக்கொண்டார் செல்சியின் ராஸ் பார்க்லி. ஆட்டத் தின் 30வது நிமி டத்தில் அவர் அடித்த கோலால் செல்சி முன்னிலை பெற்றது. அதன்பின் 58வது நிமிடத்தில் ஒலிவியே ஜிரூ தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, அந்த முன்னிலை இரட்டிப்பானது.

ஆட்டம் முடிய பத்து நிமிடங்கள் இருந்தபோது மால்மோ வீரர் ஆண்டர்ஸ் கிறிஸ்டியன்சன் ஒரு கோலடித்து, சுவீடன் ரசிகர்களுக் குச் சற்று ஆறுதல் அளித்தார்.
போட்டிக்குப் பின் பேசிய செல்சி நிர்வாகி மொரிசியோ சாரி, “சிட்டியிடம் கிட்டிய தோல்வியால் மனம் தளர்ந்திருந்த நிலையில் மீண்டும் நம்பிக்கையுடன் விளை யாடுவது அவ்வளவு எளிதான தல்ல. இந்த நிலையில், மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருப் பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
இவ்விரு குழுக்களுக்கு இடை யிலான இரண்டாவது ஆட்டம் வரும் 21ஆம் தேதி செல்சியின் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடக்கவிருக்கிறது.