யுவென்டஸ் வெற்றி: லீக்கில் முன்னிலை

டுரின்: இத்தாலிய லீக் காற்பந்துப்  போட்டி ஆட்டத்தில் ஃபிரோஸினோன் குழுவை 3=0 எனும் கோல் கணக்கில் யுவென்டஸ் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் யுவென்டஸ் 66 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது இடத்தில் நெப்போலியைவிட யுவென்டஸ் 14 புள்ளிகள் அதிகமாகப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
ஃபிரோஸினோன் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் யுவென்டசின் முதல் கோலை பாவ்லோ டிபாலா போட்டார். இரண்டாவது கோலை லியோனார்டோ பொனுச்சி போட்டார்.
இதையடுத்து, யுவென்டசின் மூன்றாவது கோலை நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டார். இது இப்பருவத்தில் அனைத்துப் போட்டிகளில் அவர் போட்டிருக்கும் 21வது கோலாகும். நெப்போலி இன்று டொரினோவைச் சந்திக்கிறது.  
பந்தை வலைக்குள் சேர்க்கும் யுவென்டசின் லியோனார்டோ பொனுச்சி (நடுவில்). படம்: ஏஎஃப்பி