சோல்சியாரின் திறமையை மெச்சும் ஸோலா

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் செல்சியும் மான்செஸ்டர் யுனைடெட்டும் நாளை மறுநாள் அதிகாலை மோதுகின்றன.
இந்த ஆட்டம் செல்சியின் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் விளை யாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், யுனைடெட்டை வெற்றியின் திசைக்குத் திரும்ப வைத்துள்ள நிர்வாகி ஒலே குனார் சோல்சியாரை வெகுவாகப் பாராட்டுகிறார் செல்சியின் உதவிப் பயிற்றுவிப்பாளரும் இத்தாலியின் முன்னாள் நட்சத்திர வீரருமான ஜியான்ஃபிராங்கோ ஸோலா.
1990களில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்காக சோல்சி யார் விளையாடியபோது ஸே„லா செல்சிக்காக விளையாடினார்.
சோல்சியார் யுனைடெட்டின் நிர்வாகியாகப் பொறுப்பேற்றதும் யுனைடெட் வெற்றிகளைக் குவித்து வருகிறது.
இது ஸே„லாவை அதிகம்  கவர்ந்துள்ளது.
சோல்சியார் நிர்வாகி ஆனதும் யுனைடெட் 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டது.
சில நாட்களுக்கு முன்புதான் அதன் முதல் தோல்வியை யுனைடெட் சந்தித்தது.
சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் அது பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவிடம் 2-0 எனும் கோல் கணக்கில் தோற்றது.
ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் யுனைடெட் அதிகம் மேம் பட்டுள்ளது. இதுவரை 51 புள்ளிகள் பெற்று இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
மாறாக, செல்சி அண்மையில் போர்ன்மத் குழுவிடம் 4=0 எனும் கோல் கணக்கிலும் மான்செஸ்டர் சிட்டியிடம் 6=0 எனும் கோல் கணக்கிலும் படுதோல்வி அடைந்தது.
இதுவரை 50 புள்ளிகள் பெற்றுள்ள செல்சி, லீக் பட்டியலில்  ஆறாவது இடத்தில் உள்ளது.
“பயிற்றுவிப்பாளர் பயிற்சியில் நானும் சோல்சியாரும் ஒன்றாகப் பங்கெடுத்தோம். அவர் மிகவும் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். சில மாதங்களுக்கு முன்பு யுனைடெட் சோபிக்கவில்லை. ஆனால் அந்தக் குழுவின் தரம் பற்றி எனக்குத் தெரியும். யுனைடெட் மீண்டுவரும் என்று எனக்குத் தெரியும். 
“குறுகிய காலக்கட்டத்தில் யுனைடெட்டின் நிலையை முற்றிலும் மாற்றிய சோல்சியாரின் திறமையைப் பாராட்ட வேண்டும்.
“தற்போது யுனைடெட் வலிமை மிக்க குழுவாக இருக்கிறது. இம்மாதிரியான சவால்தான் எங்களுக்கு இப்போது தேவை,” என்று ஸே„லா தெரிவித்தார்.
காலிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற வேண்டும் என்று இரு குழுக்களும் முனைப்புடன் இருப்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மற்றோர் எஃப்ஏ கிண்ண ஆட்டத்தில் பிரிமியர் லீக்கில் விளையாடும் வாட்ஃபர்ட், இரண்டாம் நிலை லீக்கில் விளையாடும் குவீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் குழுவை 1=0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘சிக்சர்’களையும் ‘பவுண்டரி’களையும் விளாசி அசத்திய இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி