தென்னாப்பிரிக்காவை  வீழ்த்தியது இலங்கை

டர்பன்: இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையி லான முதலாவது டெஸ்ட் கிரிக் கெட் போட்டி டர்பனில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. 
இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்னாப்பிரிக்கா 235 ஓட்டங்களும் இலங்கை 191 ஓட்டங்களும் எடுத்தன. 44 ஓட் டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய தென்னாப் பிரிக்கா 259 ஓட்டங்களில் ஆட்ட மிழந்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 304 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 3வது நாள் முடிவில் மூன்று விக் கெட்டுகளுக்கு 83 ஓட்டங்கள் எடுத்திருந்தது.  ஒஷாடே ஃபெர் னாண்டோ 28 ஓட்டங்களுடனும் குசல் பெரேரா 12 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் டர்பனின் கிங்ஸ்மெட் மைதானத்தில் 4வது ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து பந்தடித்த இலங்கை அணியில் ஒஷாடே ஃபெர் னாண்டோ (37 ஓட்டங்கள்), அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (0) ஆகியோரின் விக் கெட்டுகளை  வீழ்த்தினார் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின். 
இதன் பின்னர் 6வது விக்கெட் டுக்கு குசல் பெரேராவும் தனஞ் செயா டி சில்வாவும் இணைந்து அணியைச் சரிவில் இருந்து ஓரளவு மீட்டதுடன் அணியை 200 ஓட்டங்களைக் கடக்க வைத்தனர். 6வது விக்கெட்டுக்கு 96 ஓட்டங் கள் திரட்டிய இந்த ஜோடிக்கு சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் ‘செக்’ வைத்தார். 
ஒரே ஓவரில் தனஞ்ஜெயா டி சில்வா (48 ஓட்டங்கள்), அடுத்து வந்த லக்மல் (0) ஆகியோரைக் காலி செய்தார். எம்புல்டெனியா (4 ஓட்டங்கள்), ரஜிதா (1) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. அப்போது இலங்கை அணி 9 விக்கெட்டு களுக்கு 226 ஓட்டங்களுடன் தத் தளித்துக் கொண்டிருந்தது. தென் னாப்பிரிக்க அணி வெற்றி பெறு வது உறுதி என்றே நினைக்கத் தோன்றியது.
இந்தச் சூழலில் குசல் பெரேரா கடைசி விக்கெட்டுக்கு நுழைந்த விஷ்வா ஃபெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்து அணியை கரை சேர்க்கும் போராட்டத்தில் இறங்கி னார். இறுதியில் பவுண்டரி அடித்து தனது அணியின் இலக்கை எட்ட கைகொடுத்தார். இலங்கை அணி 85.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 304 ஓட்டங் கள் குவித்து ஒரு விக்கெட் வித் தியாசத்தில் அதிரடியாக வென் றது. தனது 2வது சதத்தை நிறைவு செய்த குசல் பெரேரா 153 ஓட் டங்களுடனும் (200 பந்து, 12 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்), விஷ் வா பெர்னாண்டோ 6 ஓட்டங்களுட னும் (27 பந்து) களத்தில் இருந் தனர். இவர்கள் கடைசி விக்கெட் டுக்கு 78 ஓட்டங்கள் சேர்த்தனர். 
1994ஆம் ஆண்டு கராச்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தானின் இன் ஸமாம் உல்-ஹக், முஷ்டாக் அகமது ஜோடி கடைசி விக் கெட்டுக்கு 57 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றதே முந்தைய அதிகபட்சமாக இருந்தது. அந்த 25 ஆண்டு கால சாதனையை இலங்கை ஜோடி தகர்த்துள்ளது. 
தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங் கைக்குக் கிடைத்த 2வது வெற்றி யாக இது அமைந்தது. இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு இதே மைதானத்தில் வெற்றி பெற்றிருந் தது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 21ஆம் தேதி தொடங்குகிறது.