சேவாக்: வீர மரணம் அடைந்த வீரர்கள்  குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன்

புதுடெல்லி: காஷ்மீரில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு முன்னணி விளையாட்டு வீரர்கள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், “உயிர் தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போது மானதாக இருக்காது. 
“ஆனால் குறைந்தது என் னால் முடிந்த உதவியாக வீரமர ணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். 
“அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’ யில் படிக்க வைக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...
Load next