லீல்: பிரெஞ்சுக் காற்பந்துக் குழு ஒன்றுக்குப் பயிற்றுவிப்பாளராக தம்மைப் பார்க்க முடிவதாக மான்செஸ்டர் யுனைடெட் குழு வின் முன்னாள் நிர்வாகி ஜோசே மொரின்யோ தெரிவித்துள்ளார். பிரெஞ்சு லீக் குழுக்களான லீல், மாண்ட்பிளியர் நேற்று முன் தினம் பொருதிய ஆட்டத்தைப் பார்க்க மொரின்யோ சென்றார். அந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது. கடந்த டிசம்பரில் யுனைடெட் டின் நிர்வாகி பதவியிலிருந்து மொரின்யோ நீக்கப்பட்டார். பதவிநீக்கத்திற்காக மொரின் யோவிற்கு யுனைடெட் 19.6 மில் லியன் பவுண்ட் (S$25 மில்லியன்) இழப்பீடு வழங்கியது. இந்நிலையில், பயிற்றுவிப் பாளர் பணியை நாட விரும்பும் மொரின்யோவின் கவனம் பிரான்ஸ் பக்கம் திரும்பியுள்ளது. "ஒரு நாள் பிரெஞ்சு காற்பந் துக் குழு ஒன்றுக்கு பயிற்று விப்பாளராக இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடி கிறது. "நான்கு வெவ்வேறு நாடு களில் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்த அனுபவம் எனக்கு உண்டு. பிற நாட்டு கலாசாரங் களைக் கற்றுக்கொள்வதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு," என்றார் மொரின்யோ. இந்நிலையில், மொரின்யோ முன்னதாக நிர்வகித்த ரியால் மட்ரிட் குழுவுக்கு அவர் திரும்பக் கூடும் என்ற பேச்சும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பிரான்ஸ் பக்கம் மொரின்யோவின் பார்வை
1 mins read
-

