கெட்டவார்த்தை, மட்டையடியால் அபராதம்

கிறைஸ்ட்சர்ச்: பந்துவீசும்போது கெட்ட வார்த்தை பேசிய நியூசிலாந்து வீரர் டிரெண்ட் பவுல்ட் மற்றும் பங்ளாதேஷ் வீரர் மஹ்மதுல்லா ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள் ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 
முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியது.
கிறைஸ்ட் சர்ச் நகரில் சென்ற சனிக் கிழமை நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் பந்து வீசும்போது தகாத வார்த்தைகளில் பேசியதாக புகார் தெரிவிக் கப்பட்டது. 
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட் டதைத் தொடர்ந்து போட்டியில் அவருக்குக் கிடைக்கும் ஊதியத்தில் இருந்து 15 விழுக்காட்டுத் தொகையை அபராதமாக செலுத்த ஐசிசி உத்தர விட்டுள் ளது.
அதேபோல் பங்ளாதேஷ் வீரர் மஹ்மதுல்லா, ஆட்ட மிழந்து வெளியேறியபோது எல்லைக்கோட்டை, தனது கிரிக்கெட் மட்டையால் அடித்துவிட்டுச் சென்றார். 
இதற்காக, போட்டி ஊதியத் திலிருந்து 10 விழுக்காட்டுத் தொகையை அவர் அபராதமாக செலுத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது. மேலும், இரு வீரர்களுக்கும் தலா ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப் பட்டுள்ளது. இவர்கள் இருவரும் முதல்முறையாக இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபடுவதால் இருவருக்கும் ஒரு டிமெரிட் புள்ளி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 
தொடர்ந்து இதுபோன்று தவறுகளைச் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பந்தைப் பிடித்து விக்கெட்டைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பாகிஸ்தான் வீரர் முகம்மது அமீரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் டேவிட் மில்லர். படம்: ஏஎஃப்பி

25 Jun 2019

தென்னாப்பிரிக்க அணியின் பயணம் முடிந்தது

அர்ஜெண்டினாவின் இரண்டாவது கோலைப் போடும் செர்ஜியோ அகுவேரோ (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

25 Jun 2019

கத்தாரைச் சாய்த்த அர்ஜெண்டினா

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை விராத் கோஹ்லியுடன் கொண்டாடும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா (இடது). ஆட்ட நாயகன் விருதை பும்ரா தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

24 Jun 2019

விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்