குசலுக்கு குவிகிறது பாராட்டு

குசல் பெரேரா. படம்: ஏஎஃப்பி

கொழும்பு: தென்னாப்பிரிக்கா வுக்கு எதிராக டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.
இலங்கை அணி 304 ஓட்டங் கள் இலக்கை எடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற குசல் பெரேரா முக்கிய பங்கு வகித்தார். அவர் 153 ஓட்டங்கள் குவித்தார். தென்னாப்பிரிக்கா வின் வெற்றி உறுதியான நிலையில் கடைசி விக்கெட்டை வைத்து அபாரமாக விளையாடி ஆட்டத்தை மாற்றி குசல் பெரேரா இலங்கை அணியை வெற்றிபெற வைத்தார். 
கார்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ் 214 ஓட்டங்கள், இங்கி லாந்துக்கு எதிராக 1984). லாரா (வெஸ்ட் இண்டீஸ். 153 ஓட்டங் கள், ஆஸ்திரேலியாவுக்கு எதி ராக 1999).
ஜெயவர்த்தனே (இலங்கை. 123 ஓட்டங்கள், தென் ஆப்பிரிக் காவுக்கு எதிராக 2006), டெண் டுல்கர் (இந்தியா. 103 ஓட்டங்கள், இங்கிலாந்துக்கு எதிராக 2008), வி.வி.எஸ். லட்சுமண் (இந்தியா. 103 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக 2010). ஆகியோர் வரிசை யில் குசால் பெரேரா இணைந்தார்.
இதை தொடர்ந்து குசல் பெரேராவுக்குப் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்ககரா கூறியதாவது:

“குசல் பெரேரா ஆற்றல்மிகு வீரர். இதை ஒரு மிகச் சிறந்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். அவரது ஆட்டத்தை மறக்க  என் றும் இயலாது,” என்றார்.
மற்றொரு முன்னாள் அணித் தலைவர் ஜெயவர்தனே கூறும் போது “குசல் பெரேரா ஓர் அரு மையான இன்னிங்சை விளை யாடி இருக்கிறார். அவர் நெருக் கடியான நேரத்தில் சிறந்த இன் னிங்சை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தை என்றுமே யாராலும் மறக்க முடியாது,” என் றார். இதேபோல் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில்விக்ரம சிங்கே, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோரும் குசல் பெரேரா வைப் பாராட்டு மழையில் நனைய வைத்தனர்.