யுனைடெட் பாய்ச்சலில் கவிழ்ந்தது செல்சி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் செல்சியை 2=0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் யுனைடெட் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. சொந்த அரங்கில் தோல்வியைத் தழுவி செல்சி போட்டியிலிருந்து வெளியேறியிருப்பது செல்சிக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் யுனைடெட்டின் ஆண்டர் ஹெரேரா தலையால் முட்டிய பந்து வலையைத் தீண்டியது.
இடைவேளைக்குச் சில வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்த போது யுனைடெட்டின் இரண் டாவது கோல் போடப்பட்டது.
மார்கஸ் ரேஷ்ஃபர்ட் அனுப்பிய பந்தைப் பாய்ந்து சென்று தலையால் முட்டி வலைக்குள் சேர்த்தார் நட்சத்திர வீரர் பால் போக்பா.
பிற்பாதி ஆட்டத்திலும் செல்சியால் கோல் போட முடியாமல் போக யுனைடெட் ஆட்டத்தைக் கைப்பற்றியது. 
ஆட்டத்தின்போது செல்சி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அக்குழுவின் ரசிகர்கள் நிர்வாகி மோரிசியோ சாரிக்கு எதிராக முழக்கங் களிட்டனர்.
“நீ என்ன செய்கிறாய் என்று உனக்கே தெரியவில்லை. நாளை காலை நீ பதவி நீக்கம் செய்யப் படுவாய்,” என்று அவர்கள் கோபக் குரல்களை எழுப்பினர்.
இப்பருவத்தில் செல்சி ஆட்டக் காரர்கள் தங்கள் நிர்வாகியைப் பலமுறை கடுமையாக விமர்சித் திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பாய்ந்து சென்று தலையால் முட்டிய பந்து வலைக்குள் சென்றதைக் கண்டு பூரித்துப் போகிறார் யுனைடெட்டின் பால் போக்பா (இடமிருந்து மூன்றாவது). அவருடன் கொண்டாடுகிறார் ரொமேலு லுக்காகு. யுனைடெட்டின் இரண்டாவது கோல் புகுந்ததைக் கண்டு சொல்ல முடியா வேதனையுடன் தரையில் கிடக்கும் செல்சி கோல்காப்பாளர் கெப்பா அரிசாபலாகா. படம்: ராய்ட்டர்ஸ் 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகிழ்ச்சியை சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பங்ளாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் (வலக்கோடி). படம்: இணையம்

26 Jun 2019

பங்ளாதேஷ் அசத்தல் வெற்றி