மேத்யூ ஹைடன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோஹ்லி ஆதிக்கம் செலுத்துவார்

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணித் தலைவரும் நட்சத்திரப் பந்தடிப் பாளருமான விராத்  கோஹ்லி (படம்) ஆதிக்கம் செலுத்துவார் என்ற ஆஸ்திரேலியாவின் முன் னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டி20 போட்டி வருகிற 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டித் தொடர் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கருத்து தெரிவித்தார். 
“அண்மையில் ஆஸ்திரேலி யாவில் நடைபெற்ற தொடரில் விராத் கோஹ்லிக்கு ஆஸ்திரேலிய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் நெருக்குதல் கொடுத் தார். கோஹ்லியின் விக்கெட்டை மூன்று முறை கைப்பற்றி இருந்தார். ஆனால் இந்தியாவில் விளையாடிய அனுபவம் ரிச்சர்ட்சனுக்கு இல்லை. இதனால் ஆஸ்திரேலி யாவுக்கு எதிராக கோஹ்லி ஆதிக்கம் செலுத்துவார் என நம்புகிறேன்,” என்றார் மேத்யூ ஹைடன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு