சிறந்த வீரர் விருதை பெற்றார் ஜோக்கோவிச்

மொனாக்கோ: உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் தட்டிச் சென்றார். செர்பியாவைச் சேர்ந்த இவர் இந்த விருதை வென்று இருப்பது இது நான்காவது முறை.
ஆண்டு முழுவதும் விளை யாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுக்கு சிறந்த பங்க ளிப்பை அளித்து வருபவர் களுக்கு 2000ஆம் ஆண்டு முதல் மொனாக்கோவை சேர்ந்த ‘லாரெஸ்’ உலக விளை யாட்டு அகாடமி விருது வழங்கி கௌரவித்து வரு கிறது. இந்த ஆண்டுக்கான லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கும் விழா மொனாக்கோவில் கோலா கலமாக நடைபெற்றது.
கடந்த ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு களமிறங்கிய ஜோக்கோவிச், விம்பிள்டன் மற்றும் அமெரிக்கப் பொது விருது பட்டத்தை வென்றார். அத்துடன் கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்தி ரேலிய பொது விருது பட்டத்தையும் அவர் கைப்பற்றினார். 
இது அவரது 15வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘சிக்சர்’களையும் ‘பவுண்டரி’களையும் விளாசி அசத்திய இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி